Breaking News

2025 இற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று (09) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் பெப்ரவரி 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பும் 25 ஆம் திகதி பிற்பகல் இடம்பெறவுள்ளது. 

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21 ஆம் திகதி பிற்பகல் நடைபெறவுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான புதிய வேட்புமனுக்களை கோருவது தொடர்பான உள்ளூராட்சி சபைத் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அரச நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட இது தொடர்பான சட்டமூலம் அண்மையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

சம்பந்தப்பட்ட சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பிறகு, உள்ளூராட்சி தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments