அநுர அரசின் அதிரடி : இன்று சிஐடியில் முன்னிலையாகவுள்ள மகிந்தவின் மகன்
கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள அரச காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன் அந்த காணி தொடர்பில் மகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியான நெவில் வன்னியாராச்சி கடந்த வெள்ளிக்கிழமை (27.12.2024) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். இதன்போது, அவர் 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்ததாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நிதியமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காகவே அவர் குறித்த திணைக்களத்திற்குச் செல்லவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments