கொழும்பான்களின் கூக்குரலுக்கு பயந்தவன் நான் அல்ல! பொதுச்சபைக்கே என்னை நீக்கும் அதிகாரம் உள்ளது! சிவமோகன் காட்டம்!
பால்சோறு உண்டவர்கள் நீங்கள். எமக்கு பதவி தேவையில்லை எந்த நோக்கத்திற்காக அந்த மண்ணில் நாங்கள் நின்றோமோ அந்த நோக்கத்தை உருக்குலைக்க ஒருபோதும் விடப்போவதில்லை.
தங்களது தேசிய பட்டியலை வேண்டிவிட்டு அது குழம்பிவிடக்கூடாது என்பதற்காக அதுவரை பொறுமைகாத்து மாவை சேனாதிராஜாவை தலைவராக மேசையில் இருத்தினார்கள். மாவை ஒரு பதவி விரும்பி அல்ல. ஆரம்பாலத்தில் இருந்து சிறைசென்று கட்சியை வளர்த்த ஒரு தலைவர். அவரைநீங்கள் அசிங்கப்படுத்தலாமா.
இதேவேளை கட்சியில் இருந்து என்னை இடைநீக்கியதாக கூறப்படும் கடிதம் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. கிடைத்தால் என்னை நீக்குவதற்கு பதில் செயலாளருக்கு அதிகாரங்கள் ஒன்றும் இல்லை என்று கூறி அவரை உடனடியாக பதவி விலகுமாறு தெரிவித்து நான் வழக்கினை தாக்கல் செய்வேன்.என்றார்.
No comments