Breaking News

யாழிற்கு திடீர் விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி

யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விஜயம் செய்யவுள்ளார்.

குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடக சந்திப்பில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார யாழ். மாவட்ட செயலகத்தில் விசேட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அங்கத்தவர்களுடன் சந்திப்பொன்றில் அவர் பங்கேற்கவுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்ததன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமாரவின் முதல் யாழ் விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments