மோசடியில் சிக்கிய பெண் கல்விப்பணிப்பாளர்
இதனடிப்படையில், அனுராதபுரம் பிராந்தியக் கல்விப் பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக வடமத்திய மாகாண பிரதம செயலாளர் வருண சமரதிவாகரவினால் NCP/CS/ED/15/111/2/40 என்ற கடிதத்துடன் ஐந்து குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரிகை16.07.2024.அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அனுராதபுரம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் சாதாரணதரத்தை கற்கும் மாணவர்களுக்கான கணிதபாடத்தின் பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கில் 28 பாடசாலைகளில் 30 நிலையங்களில் 17.10.2022 முதல் 26.10.2022 வரையிலான காலப்பகுதியில் கணித முகாம்களை நடாத்துவதற்கு மாகாணக் கல்வி அமைச்சு திட்டமிட்டிருந்தது.
எனினும் திட்டமிட்டபடி குறித்த காலப்பகுதியில் 14 பாடசாலைகளில் மாத்திரம் இந்த கணித முகாம்கள் நடத்தப்பட்டநிலையில் மேலதிகமாக 14 பாடசாலைகளில் கணித முகாம்கள் நடத்தப்பட்டதாக போலி ஆவணங்களை உருவாக்கி முறைகேடு செய்தமை பாரிய தவறு என வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பிரதம செயலாளர் அனுப்பியுள்ள குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கணித முகாமை நடத்துவதற்கு தேவையான பணித்தாள்களை அச்சடித்ததாக போலி பில்களை சமர்ப்பித்து ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் முறைகேடு செய்ததாக தலைமைச் செயலாளரின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, இந்த கணித முகாம்களை நடத்துவதற்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டதாக பொய்யான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளரின் குற்றப்பத்திரிகையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
No comments