நான்காயிரம் மதுபான போத்தல்களைக் கைப்பற்றிய விசேட அதிரடிப்படையினர்
கிரிபத்கொடை பகுதியில் சுமார் நான்காயிரம் மதுபான போத்தல்களை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள மதுபான உற்பத்தி நிலையத்தில் காவல்துறை விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது இந்த மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
No comments