Breaking News

வவுனியாவில் புகையிரதம் மோதி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

வவுனியாவில் புகையிரதம் மோதி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஈரப்பெரியகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் இன்று (31.01) காலை 9 மணியளவில் வவுனியா, அவுசதப்பிட்டிய பகுதியில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட மோட்டர் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிள் சாரதியான 44 வயதுடைய போக்குவரத்து பொலிசார் காயமடைந்துள்ளார். 

காயமடைந்த பொலிசார் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் ஈரப்பெரியகுளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

No comments