Breaking News

தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர் ரிஐடியால் விசாரணைக்கு அழைப்பு

தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவையாளருமான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பீற்றர் இளஞ்செழியனின் இல்லத்துக்கு சென்ற பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவு அதிகாரிகள் இது குறித்த கடித்தத்தை வழங்கியுள்ளனர்.

குறித்த கடிதத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்கு மூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வரும் சனிக்கிழமை (01) காலை பத்து மணிக்கு அளம்பில் காவல் நிலையத்தில் அமைந்திருக்கும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவிற்கு வருகை தருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments