சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பதினொரு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் திணைக்களம் இது தொடர்பிலான அதிகாரபூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான வீ.கினிகே, பீ.ஏ.வீரசிங்க, ஏ.பி குணதிலக்க, எல்.ஏ. தர்மசேன, எல்.ஆர். கமகே, ஐ.ஏ.அமரசிங்க, எஸ்.கே. விக்ரமநாயக்க, எம்.ஈ பெரேரா, எல்.ஏ. சோமரட்ன, ஈ.எல் பெரேரா மற்றும் டி.எஸ். அமரசிங்க ஆகியோர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு பிரிவுகளுக்கு இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய இந்த இடமாற்றங்கள் மேற்கோள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments